Skip to main content

ஆம்பியர் பொருளடக்கம் வரையறை வரலாறு முன்மொழியப்பட்டுள்ள எதிர்கால வரையறை மேற்கோள்கள் மேலும் பார்க்க வெளியிணைப்புகள் வழிசெலுத்தல் பட்டி"2. SI base units"the original"2.1. Unit of electric current (ampere)"the originalBase unit definitions: AmpereArchivedBIPM - ampereமூல முகவரியிலிருந்துPhysical Chemistry: Understanding our Chemical Worldthe originalSerway's principles of physics: a calculus based textthe originalBeyond the Kilogram: Redefining the International System of Unitsthe originalThe International System of Units (SI)the originalA short history of the SI units in electricityHistory of the amperethe original"Value"the originalThe NIST Reference on Constants, Units, and UncertaintyNIST Definition of ampere and μ0Tutorial video explaining amperes and current

SI அடிப்படை அலகுகள்மின்னியல் அலகுகள்


மின்னோட்டத்தின்அனைத்துலக முறை அலகுகளில்மின்னியக்கு விசையைவிநாடியில்கூலோம்பிரெஞ்சுஇயற்பியலாளர்ஆந்த்ரே-மாரி ஆம்பியர்மின்னியக்கவியலின்மீட்டர்நியூட்டன்விசையைமின்மத்தைகூலும்வெள்ளியைவலுமின்னழுத்தம்வாட்டுநேர்மின்னிகளாலானஎதிர்மின்னிகளாலான












ஆம்பியர்




கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.






Jump to navigation
Jump to search









ஆம்பியர்

Galvanometer 1890 drawing.png

மின்னோட்டத்தை கல்வனோமானி மூலமாக அளக்க முடியும், காந்த ஊசி மின்னோட்டத்துக்கு துலங்கல் காட்டும்.

அலகுத் தகவல்
அலகு முறைமை:
SI அலகு
அலகு பயன்படும் இடம்
மின்னோட்டம்
குறியீடு:A

ஆம்பியர் (குறியீடு: A) [1][2]என்பது மின்னோட்டத்தின் அனைத்துலக முறை அலகுகளில் (SI) அடிப்படை அலகு ஆகும்.[3][4]மின்னோட்டம் பாயும் மின் கடத்திகளுக்கிடையே உருவாகும் மின்னியக்கு விசையை அளப்பதே ஆம்பியர் என அனைத்துலக முறை அலகுகள் விளக்குகின்றன.


ஒரு விநாடியில் பாயும் ஒரு கூலோம் (6.241 × 1018 எதிர்மின்னிகள்) மின்மமே ஒரு ஆம்பியர் என வரைவிலக்கணப்படுத்தப்படும். (1775–1836) ஆகிய ஆண்டுகளில் வாழ்ந்த பிரெஞ்சு இயற்பியலாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் பெயரால் இவ்வலகு அழைக்கப்படுகிறது. இவர் மின்னியக்கவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.


அளவில் மாறுபடாத மின்னோட்டம் சில்வர் நைட்ரேட் கரைசலில் பாய்ந்து 0.0011180 கிராம் வெள்ளியை ஒரு
நொடியில் படியச் செய்யுமானால் அது உலகப் பொது ஆம்பியர் (International ampere) எனப்படும். இதுவும் ஆம்பியருக்கான ஒரு விளக்கமாகும்.


ஓம் விதியின்படி , ஒரு மின்சுற்றில் மின்தடையானது, மின் இயக்க விசைக்கு நேர்விகித்திலும் அதில் பாயும் மின்னோட்டத்திற்கு எதிர் விகிதத்திலும் இருக்கிறது.அதாவது R = V/I க்குச் சமம்.அல்லது


I=V/R ஆகும்.

இதிலிருந்து, ஒரு ஓம் மின் தடையினை ஒரு வோல்ட் மின்னழுத்த வேறுபாட்டில் வைத்திருக்கும் போது அதில்
பாயும் மன்னோட்டம் ஒரு ஆம்பியருக்குச் சமம் ஆகும்.




பொருளடக்கம்





  • 1 வரையறை


  • 2 வரலாறு


  • 3 முன்மொழியப்பட்டுள்ள எதிர்கால வரையறை


  • 4 மேற்கோள்கள்


  • 5 மேலும் பார்க்க


  • 6 வெளியிணைப்புகள்




வரையறை




ஆம்பியர் அலகை விளக்கும் படம்


அனைத்துலக அலகு முறையில் ஆம்பியர் என்பது கீழ்க்கண்டவாறு விளக்கப்படுகிறது:



ஒரு ஆம்பியர் என்பது, வெற்றிடமொன்றில் 1 மீட்டர் தொலைவில் உள்ள இரண்டு முடிவிலி இணையாகச் செல்லும் நீளக் கம்பிகளுக்கு இடையில் 2 x 10-7நியூட்டன் எனும் விசையை ஒரு மீட்டர் நீளத்தில் தோற்றுவிக்கும், மாறாத மின்னோட்டத்தின் அளவு என வரையறுக்கப்படுகிறது. இதில் கம்பிகளின் குறுக்களவு விட்டு விடத்தக்கதாகக் கொள்ளப்படுகிறது.[5][3][6]



ஆம்பியரின் விசை விதியின் படி[7][8]மின்னோட்டம் பாயும் இரு இணை கம்பிகளுக்கிடையே ஒரு ஈர்க்கும் அல்லது விலக்கும் விசை உள்ளது. இந்த விசையின் அளவே ஆம்பியரை அளக்க பயன்படுகிறது.


அனைத்துலக அலகு முறையில் மின்மத்தை அளக்கும் கூலும் என்பது "ஒரு விநாடி நேரத்தில், ஒரு ஆம்பியர் மின்னோட்டம் பாய்வதால் உண்டாவதாகும்"[9]


எதிரிடையாக, ஒரு ஆம்பியர் மின்னோட்டம் என்பது ஒரு விநாடி நேரத்தில், ஒரு கூலும் மின்மத்தால் உருவாகிறது.


1 A=1Cs.displaystyle rm 1 A=1tfrac Cs.

பொதுவாக, I என்ற மாறாத மின்னோட்டம், t என்ற நேரத்தில் பாயும் போது உண்டாகும் Q மின்மத்தை கீழ்க்கண்ட சமன்பாட்டின் மூலம் காணலாம்:
Q = It.



வரலாறு


ஆம்பியர் என்பது சென்டி மீட்டர்-கிராம்-விநாடி அலகு முறையிலுள்ள மின்னோட்ட அளவில் பத்தில் ஒரு பங்காக முதலில் வரையறுக்கப்பட்டது. அது இப்போது ஆப்ஆம்பியர் (abampere) என அழைக்கப்படுகிறது. இது ஒரு சென்டி மீட்டர் தொலைவில் வைக்கப்பட்டுள்ள ஒரு சென்டி மீட்டர் நீளமுள்ள இரு கம்பிகளுக்கிடையே
இரண்டு டைன் விசையை உண்டாக்கும் மின்னோட்டத்தின் அளவாகும்.[10]


சர்வ தேச ஆம்பியர் என்பது தற்போதுள்ள ஆம்பியர் அலகின் முன்பு வரையறுக்கப்பட்டது. இது வெள்ளி நைட்ரேட் கரைசலில் 0.001118 கிராம் வெள்ளியை ஒரு நொடியில் படியச் செய்யும் மின்னோட்டத்தின் அளவாகும்.[11]
பின்னர் செய்யப்பட்ட துல்லியமான செயல் முறைகளின் படி, மின்னோட்டத்தின் அளவு 0.99985 A எனக் கண்டறியப்பட்டது.


வலு என்பது மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தம் ஆகியவற்றின் பெருக்கல் தொகைக்குச் சமம். அதனால் ஒரு ஆம்பியர் என்பதை ஒரு வாட்டு வலு / ஒரு வோல்ட் மின்னழுத்தம் எனவும் கணக்கிடலாம்.



முன்மொழியப்பட்டுள்ள எதிர்கால வரையறை


இரு மின்னோட்டம் பாயும் கம்பிகளுக்கிடையேயுள்ள விசையின் அளவை விட, ஆம்பியரை அடிப்படை மின்மங்கள் பாயும் வீதத்தைக் கொண்டு கணக்கிடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.[8] ஒரு கூலும்மின் தோராயமான மதிப்பு 6.2415093×1018 எண்ணிக்கையிலான அடிப்படை மின்மங்களுக்குச் சமம். (நேர்மின்னிகளாலான நேர் மின்னூட்டங்களைச் சுமந்து வருவது மற்றும் எதிர்மின்னிகளாலான எதிர் மின்னூட்டங்களைச் சுமந்து வருவது ஆகியவை சேர்த்து அடிப்படை மின்மங்களாகக் கொள்ளப்படுகின்றன.)


ஒரு ஆம்பியர் என்பது தேராயமாக 6.2415093×1018 எண்ணிக்கையிலான அடிப்படை மின்மங்கள், ஒரு நொடியில் பாயும் வீதத்திற்குச் சமம். (6.2415093×1018 என்ற மதிப்பின் தலைகீழி அடிப்படை மின்மங்களின் அளவு கூலும்மில் அளக்கப்படுகிறது..[12]



முன்மொழியப்பட்ட மாற்றமாக 1 A என்பது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அடிப்படை மின்னூட்டங்கள், ஒரு விநாடியில் பாயும் வீதத்தைக் கொண்டு ஒரு ஆம்பியர் என்பது கணக்கிடப்படுகிறது. எடைகள் மற்றும் அளவுகளுக்கான சர்வதேச செயற்குழு 2005 ஆம் ஆண்டு இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டது.



மேற்கோள்கள்



  1. "2. SI base units", SI brochure (8th ), BIPM, archived from the original on 7 October 2014, https://web.archive.org/web/20141007203046/http://www.bipm.org/en/publications/si-brochure/section2-1.html, பார்த்த நாள்: 19 November 2011 


  2. இலங்கை அரசின் தரம் 11 அறிவியல் பாடத்திட்டம்


  3. 3.03.1 "2.1. Unit of electric current (ampere)", SI brochure (8th ), BIPM, archived from the original on 3 February 2012, https://web.archive.org/web/20120203153904/http://www.bipm.org/en/si/si_brochure/chapter2/2-1/ampere.html, பார்த்த நாள்: 19 November 2011 


  4. Base unit definitions: Ampere Archived 25 April 2017 at the வந்தவழி இயந்திரம்.. Physics.nist.gov. Retrieved on 2010-09-28.


  5. "BIPM - ampere". மூல முகவரியிலிருந்து 26 January 2017 அன்று பரணிடப்பட்டது.


  6. Monk, Paul MS (2004), Physical Chemistry: Understanding our Chemical World, John Wiley & Sons, ISBN 0-471-49180-2, archived from the original on 2 January 2014, https://web.archive.org/web/20140102235952/http://books.google.com/books?vid=ISBN0471491802&id=LupAi35QjhoC&pg=PA16&lpg=PA16&ots=IMiGyIL-67&dq=ampere+definition+si&sig=9Y0k0wgvymmLNYFMcXodwJZwvAM 


  7. Serway, Raymond A; Jewett, JW (2006). Serway's principles of physics: a calculus based text (Fourth ). Belmont, CA: Thompson Brooks/Cole. பக். 746. ISBN 0-53449143-X. Archived from the original on 21 June 2013. https://web.archive.org/web/20130621210413/http://books.google.com/books?id=1DZz341Pp50C&pg=RA1-PA746&dq=wire+%22magnetic+force%22&lr=&as_brr=0&sig=4vMV_CH6Nm8ZkgjtDJFlupekYoA#PRA1-PA746,M1. 


  8. 8.08.1 Beyond the Kilogram: Redefining the International System of Units, USA: National Institute of Standards and Technology, 2006, archived from the original on 21 March 2008, https://web.archive.org/web/20080321221139/https://www.nist.gov/public_affairs/newsfromnist_beyond_the_kilogram.htm, பார்த்த நாள்: 3 December 2008 .


  9. (PDF) The International System of Units (SI) (8th ), Bureau International des Poids et Mesures, 2006, p. 144, archived from the original on 5 November 2013, https://web.archive.org/web/20131105051930/http://www.bipm.org/utils/common/pdf/si_brochure_8_en.pdf .


  10. Kowalski, L, A short history of the SI units in electricity, Montclair, http://alpha.montclair.edu/~kowalskiL/SI/SI_PAGE.HTML 


  11. History of the ampere, Sizes, 1 April 2014, archived from the original on 20 October 2016, https://web.archive.org/web/20161020170913/http://sizes.com/units/ampHist.htm, பார்த்த நாள்: 2017-01-29 


  12. "Value", Physics, USA: NIST, archived from the original on 24 April 2015, https://web.archive.org/web/20150424223347/http://physics.nist.gov/cgi-bin/cuu/Value?e .


மேலும் பார்க்க


  • மின்னோட்டமானி

  • மின்னோட்டம்

  • மின் அதிர்ச்சி


வெளியிணைப்புகள்


  • The NIST Reference on Constants, Units, and Uncertainty

  • NIST Definition of ampere and μ0

  • Tutorial video explaining amperes and current




"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பியர்&oldid=2526171" இருந்து மீள்விக்கப்பட்டது










வழிசெலுத்தல் பட்டி




























(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.248","walltime":"0.320","ppvisitednodes":"value":7309,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":75332,"limit":2097152,"templateargumentsize":"value":27278,"limit":2097152,"expansiondepth":"value":25,"limit":40,"expensivefunctioncount":"value":2,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":18276,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 244.484 1 -total"," 38.60% 94.375 8 வார்ப்புரு:Citation"," 36.55% 89.349 9 வார்ப்புரு:Citation/core"," 18.26% 44.642 5 வார்ப்புரு:Val"," 12.11% 29.605 1 வார்ப்புரு:Webarchive"," 7.33% 17.917 1 வார்ப்புரு:Cite_book"," 6.60% 16.126 2 வார்ப்புரு:Citation/identifier"," 5.94% 14.520 8 வார்ப்புரு:Val/delimitnum"," 5.21% 12.728 20 வார்ப்புரு:Valid"," 4.41% 10.770 8 வார்ப்புரு:Val/delimitnum/logic"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.006","limit":"10.000","limitreport-memusage":"value":594913,"limit":52428800,"cachereport":"origin":"mw1318","timestamp":"20190313034258","ttl":2592000,"transientcontent":false););"@context":"https://schema.org","@type":"Article","name":"u0b86u0baeu0bcdu0baau0bbfu0bafu0bb0u0bcd","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D","sameAs":"http://www.wikidata.org/entity/Q25272","mainEntity":"http://www.wikidata.org/entity/Q25272","author":"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects","publisher":"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png","datePublished":"2009-03-02T12:16:42Z","dateModified":"2018-05-18T15:45:05Z","image":"https://upload.wikimedia.org/wikipedia/commons/2/2b/Galvanometer_1890_drawing.png"(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgBackendResponseTime":120,"wgHostname":"mw1273"););

Popular posts from this blog

Boston (Lincolnshire) Stedsbyld | Berne yn Boston | NavigaasjemenuBoston Borough CouncilBoston, Lincolnshire

Trouble understanding the speech of overseas colleaguesHow can I better understand manager or clients with strong accents?Adding more movement and speech at the fundamental level to a highly-sedentary job?Difficulty in understanding Manager's accent(language and communication)How to adjust yourself where your colleagues are not understanding to you?Understanding manager's expectationsForeigner and colleagues using slangHaving difficulty understanding meetingsHow do you breathe when giving a speech?Trouble Waking Up for Emergencies (On-Call)Problems with colleaguesColleagues feeling insecure when I do my work

Ballerup Komuun Stääden an saarpen | Futnuuten | Luke uk diar | Nawigatsjuunwww.ballerup.dkwww.statistikbanken.dk: Tabelle BEF44 (Folketal pr. 1. januar fordelt på byer)Commonskategorii: Ballerup Komuun55° 44′ N, 12° 22′ O